வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸ் ஐ விட அதுதான் முக்கியம்னு கிளம்பிய விஜய் சேதுபதி.. மண்டையில இருக்க கொண்டையே மறந்த வாத்தியார்

விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 சீசனை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையே விஜய் டிவி அவருக்கு பல நெருக்கடியான அக்ரிமெண்ட் போட்டுள்ளது. பிக் பாஸ் முடியும் வரை கெட்டப் மாற்ற கூடாது. வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்பதுதான்.

ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதி வெற்றிமாறனின் படமான விடுதலை இரண்டாம் பாகம் மற்றும் மிஸ்கின் இயக்கிய வரும் டிரெயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதற்கு தயாராகி வருகிறது.

ஒருபுறம் பிக்பாஸில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதிக்கு இப்பொழுது ஒரு சிக்கல் வந்துள்ளது. இந்த இரண்டு படங்களின் பேட்ச் அப் ஒர்க் அதாவது திருப்தி அடையாத மற்றும் விட்டுப் போன காட்சிகளை மீண்டும் எடுப்பார்கள். இந்த மாதிரி வேலைகள் இரண்டு படங்களிலும் இருக்கிறது.

மண்டையில இருக்க கொண்டையே மறந்த வாத்தியார்

தற்சமயம் விஜய் சேதுபதி விஜய் டிவியிடம் இதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு மிஷ்கின் இயக்கி வரும் படத்தின் பேட்ச் அப் ஒர்க்குகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் இப்பொழுது பிக் பாஸுக்காக இருக்கும் கெட்டப்பே வேறு, மிஷ்கின் படத்தில் இருக்கும் கெட்டப் வேறு.

அதனால் டிரெயின் படத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒட்டு மீசை மற்றும் தாடியுடன் பேட்ச் அப் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். இதே போல் வெற்றிமாறனும் விடுதலை படத்திற்காக விஜய் சேதுபதியை அழைத்துள்ளார். விஜய் சேதுபதி நன்றாகபிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு போவதால் விஜய் டிவி எல்லாத்துக்கும் பச்சை கொடி காட்டி வருகிறது

- Advertisement -

Trending News