கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசன், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரே படத்தில் விதவிதமான தோற்றங்களில் நடித்துள்ளதை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது விஜய்சேதுபதியும் ஒரே படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில்தான் விஜய்சேதுபதி மூன்று வித்தியாசமான நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விகடன் விருதுகள் 2017 மெர்சலில் விஜய்க்கு விருது.! அப்போ விக்ரம் வேதா?

வழக்கமான தாடியுடன் கூடிய ஒரு கேரக்டர், மெடிக்கல் காலேஜ் மாணவர் கேரக்டர் மற்றும் தாடியில்லாமல் மீசையுடன் ஒரு கேரக்டர் என கதையின் அமைப்புக்கேற்றவாறு மூன்று வித்தியாசமான கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களில் தமன்னா முதன்முதலாக கிராமத்துப் பெண் கேரக்டரில் நடித்துள்ளதோடு சொந்தக்குரலில் டப்பிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் தாயாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.