Tamil Cinema News | சினிமா செய்திகள்
பத்திரிகையாளர்களின் வில்லங்க கேள்வி.. கடுப்பாக பதில் கூறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நிவேதா பெத்துராஜ் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சங்கத் தமிழன். வீரம், பைரவா படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படம் நேற்று விஷால் நடித்த ஆக்சன் படத்திற்கு போட்டியாக ரிலீஸாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அஜித் நடித்த வீரம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த விஜய் சேதுபதிக்கு அதே தேதியில் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. அதன் பிறகு பத்திரிகையாளர்கள் அவரிடம் சங்கத் தமிழன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை? என்று கேட்டதற்கு, உங்க கிட்ட சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று காட்டமாக கூறினார்.
மேலும் ஐஐடி மாணவி பாத்திமா இறந்ததை பற்றி கேட்டதற்கு அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? என்று மீண்டும் சத்தமாக பேசி உள்ளார். சக மனிதர்களை மதிக்க தெரிந்த விஜய்சேதுபதியா இப்படி என பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
