Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்சேதுபதி-த்ரிஷா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி-த்ரிஷா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட், விஷாலின் ‘கத்திச்சண்டை’ விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி ஆகிய படங்களை அடுத்து தற்போது விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 

இந்த நிலையில் இதே நிறுவனம் தயாரிக்கவுள்ள இன்னொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். ’96’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கவுள்ளார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பதும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையும், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா இருவரது சிறு வயது கதாபாத்திற்கான நடிகர், நடிககை தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top