தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான ‘தல 57’ படத்தின் பூஜை கடந்த 6ஆம் தேதி முடிவடைந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பாடல்களை எழுத கபிலன் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியானதும் அஜித் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.!

இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்திற்கு கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனம் எழுத ஒப்பந்தம் செய்துள்ளராம். அவருடைய வசன நடையை சமீபத்தில் கேள்விப்பட்ட சிறுத்தை சிவா, ‘தல 57’ படத்திற்கும் வசனம் எழுத பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த தகவல் மிக விரைவில் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் அடுத்தப்படம் சிவா அதிரடி பேட்டி.

இந்த தகவல் உண்மையானால் ஒரே நேரத்தில் அஜித், விஜய்சேதுபதி படங்களுக்கு பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி வசனத்தையும் கபிலன் வைரமுத்து எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.