Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் க/பே ரணசிங்கம் படத்தை பார்க்க இவ்வளவுதான் கட்டணம்.. பரவாயில்லையே என்ற ரசிகர்கள்!
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் க/பே ரணசிங்கம் படம் அக்டோபர் இரண்டாம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
விஜய் சேதுபதி சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்து வந்தாலும் அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன.
அந்த வகையில் க/பே ரணசிங்கம் படத்திற்கு ட்ரெய்லர் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் விஜய் சேதுபதி மிகவும் உற்சாகத்தில் இருந்த நேரத்தில் தியேட்டரில் வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதற்காக தற்போது க/பே ரணசிங்கம் படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்து zee5 தளத்திற்கு விற்றுவிட்டனர். இந்நிலையில் ஜி5 பிளக்ஸ் என்ற OTT தளத்தில் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தை ஒரு முறை பார்க்க ரூ.199/- ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் குறைந்தது இரண்டாயிரம் செலவாகும் நிலையில் வெறும் 199 ரூபாயில் அனைவரும் டிவியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
பல ரசிகர்கள் இதை வரவேற்றாலும் சிலர் ரசிகர்களிடம் இதற்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
