விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்க கதை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘சீதக்காதி’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படும். பல நூற்றாண்டு முன்பு வாழ்ந்த கவிஞரும் வள்ளலுமான சீதக்காதியின் பெயரை வைத்து உருவாகும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி பட வரிசையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் முக்கியமான படமாகும். இப்படம் அவருக்கு சினிமா மார்க்கெட்டில் நிலையான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது எனலாம். அந்த வகையில், பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி மீண்டும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.