fbpx
Connect with us

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சூப்பர்ஸ்டார் குடும்ப வாரிசு.!யார் தெரியுமா.!

vijaysethupathi

News / செய்திகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சூப்பர்ஸ்டார் குடும்ப வாரிசு.!யார் தெரியுமா.!

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் குடும்ப வாரிசு நடிக்கிறார்.

actress

சினிமாவில் வாரிசுகளின் வருகை வாடிக்கையான ஒன்று தான், வாரிசுளின் வருகையை தவிர்க்கவே முடியாது! ரத்த சம்பந்தமாகவோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரோ ஒருவர் திரை உலகில் பிரபலமாக இருப்பதால், வாரிசுகளின் திரைப் பயணம் சுலபமாக இருக்கும்!

அந்த அடிப்படையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா கோனிடேலா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

actor

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் தான் நிகாரிகா கோனிடேலா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கவுதம் கார்த்திக் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார்.

தமிழ் படத்தில் அறிமுகமாகும் பற்றி நிஹாரிகா கூறுகையில், ” தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. நல்ல டீம், சிறப்பான கதை எனக்கு அமைந்துள்ளது .

தமிழ் மொழி மீது என்றுமே பற்றுள்ளவள் நான். எனது குடும்பத்தில் எல்லோருமே நன்றாக தமிழ் பேசுவார்கள். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது.

vijaysethupathy

அவர்களுடன் பணிபுரிந்து ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பது சஸ்பென்ஸ்.

எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஆதரவும், ஊக்கமும் அளவற்றது. இது போன்ற ஒரு குடும்பம் அமைந்துள்ளதால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வரும் என்னை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் ” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top