Connect with us
Cinemapettai

Cinemapettai

kaathuvakula-rendu-kaadhal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2 பேருக்கு ரூட் விடும் விஜய்சேதுபதி.. படம் வேற லெவல் இருக்கும் போங்க

இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது..

சமந்தாவும் நயன்தாராவும் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்கள் பல நடித்துள்ளனர். மேலும் பல மொழி படங்களிலும் நடித்துள்ளனர். இருவரும் அவருக்கு அவர்களுக்கென தனி ஒரு நடிப்பு பாணியை கொண்டவர்கள்.

தற்போது இருபெரு அழகு தேவதைகளும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது என்றுதான் சொல்லவேண்டும் . காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் தான் சமந்தா நயன்தாரா கூட்டணி .

நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒன்று சேருகிறது. இதில் சமந்தாவும் இணைகிறார்.

nayanthara-samantha-video

nayanthara-samantha-video

இத்திரைப்படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் சகோதரிகளாக நடிப்பார்கள் என்று தோன்றுகிறது. இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒரே மாதிரியான புடவை கட்டிய புகைப்படம் வெளியானதுமே இவ்வாறு ஒரு யூகம் வந்துள்ளது.

மேலும் இது ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்க இருக்கிறார். ஆனால் சமந்தா இந்த படத்திற்கு பின் சிறிது ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.

Continue Reading
To Top