fbpx
Connect with us

Cinemapettai

சும்மா கெத்தா இந்த வருடத்தில் மட்டுமே 18 படமா.!!! விஜய் சேதுபதியை பார்த்து வியக்கும் கோலிவுட் நடிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சும்மா கெத்தா இந்த வருடத்தில் மட்டுமே 18 படமா.!!! விஜய் சேதுபதியை பார்த்து வியக்கும் கோலிவுட் நடிகர்கள்

தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் விஜய் சேதுபதி அதன்பிறகு தன் கடின உழைப்பால் சீனு ராமசாமியின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அந்த படத்தின் பெயர் தென்மேற்கு பருவக்காற்று.

அதன் பிறகு பீட்சா, சூதுகவ்வும் இதற்கு ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இவருக்கு  நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதன்பிறகு ஆரஞ்சு மிட்டாய் ,சீதக்காதி போன்ற படங்களும் அவருக்கு தோல்வியை கொடுத்தது. தமிழ் காமெடி நடிகர்கள் நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லும் காலத்தில் இவர் அந்த மாதிரி ஹீரோ வாய்ப்புகளை எல்லாம் எதிர்பார்க்காமல் கதை பிடித்திருந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடிப்பேன் என்று பேட்ட படத்தில் நடித்தார்.

தற்போது இவரது  கைவரிசையில் ஏராளமான படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. காக்கா முட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி ,பண்ணையாரும் பத்மினியும் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் சிந்துபாத் படமும், சீனுராமசாமி இயக்கும் மாமனிதன் படமும் இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படமும் இன்னும் வெளிவராமல் காத்திருக்கிறது.

தெலுங்கில் நரசிம்ம ரெட்டி மற்றும் தெலுங்கு படமும், மலையாளத்தில் ஒரு படம் இயக்க காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் விஜய் சேதுபதி தற்போது 18 படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் 18 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமை நடிகர் விஜய் சேதுபதிக்கு  தற்போது கிடைத்துள்ளது.

இதைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டபோது அதற்கு விஜய் சேதுபதி பல இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லி வருவதாகவும் அந்த கதை பிடித்திருந்தால் நடிக்க ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் கால்ஷீட் தர சில நாட்கள் ஆகும் என்று சொன்னாலும் பல இயக்குனர்கள் அதனை ஏற்றுக்கொண்டு தன்னை இயக்க முன் வருவதாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top