fbpx
Connect with us

Cinemapettai

கைவிட்ட சிவகார்த்திகேயன்.. கைகொடுத்த விஜய் சேதுபதி.. வெற்றி கொடுத்த இயக்குனருக்கு இந்த கதியா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைவிட்ட சிவகார்த்திகேயன்.. கைகொடுத்த விஜய் சேதுபதி.. வெற்றி கொடுத்த இயக்குனருக்கு இந்த கதியா?

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இந்த அளவு முன்னணி நடிகராக வலம் வருவதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்களை காரணம் என்றால் மிகையாகாது. சிவகார்த்திகேயனை எப்படி மக்களிடம் ரசிக்கும் படி செய்யவேண்டும் என்ற வித்தையை தாரமாக கையாண்டிருந்தார் இயக்குனர் பொன்ராம்.

ஆனால் சீமராஜா என்ற படத்தில் இவர்களது கூட்டணி சற்று சறுக்கியது. இதனால் ஒரே அடியாக பொன்ராமை சிவகார்த்திகேயன் ஒதுக்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீமராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கும்.

மேலும் அரசர் கேரக்டர் சுத்தமாக சிவகார்த்திகேயனுக்கு எடுபடவில்லை என்பது படம் வந்த போது எழுந்த கருத்து. மேலும் மாஸ் ஹீரோ அந்தஸ்தை இன்னும் சிவகார்த்திகேயன் பெறவில்லை என்பதற்கு சான்றுதான் சீமராஜா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் நல்லதொரு நாயகனாக சினிமாவில் மீண்டு எழுந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான ஹீரோ படம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் இயக்குவதற்காக பொன்ராம் கதை ஒன்றை கூறியுள்ளார்.

ஆனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறி அனுப்பி விட்டதாக தெரிகிறது. சீமராஜா என்ற ஒற்றை படம் சறுக்கியதால், சிவகார்த்திகேயன் சீமராஜா படம் நான் நடித்து இருக்கவேகூடாது என மேடையில் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தை செய்யலாம் என்று கூறியதாகவும், திருப்பி மேடையில் படத்தைப் பற்றி அவதூராக கூறுவது சரி இல்லை எனவும் மனம் நொந்து உள்ளார் பொன்ராம். இருந்தும் மீண்டும் ஒரு சான்ஸ் கேட்டு சென்றுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பு பொன்ராமை மொத்தமாக விலக்கி விட்டதாக தெரிகிறது. இதனால் தற்போது பொன்ராம் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் பொன்ராமின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒருவேளை இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயன் மீண்டும் பொன்ராமை அழைத்து கதை கேட்பாரா? இத்தனை செய்த பிறகும் பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைவாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கோலிவுட் வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கின்றன.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை பொன்ராம் மீண்டும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜெயிப்பார் என நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top