Connect with us

Cinemapettai

சைக்களில் வந்து விஜய் வாக்களித்தது பற்றி விஜய் சேதுபதி சொன்னது என்ன தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சைக்களில் வந்து விஜய் வாக்களித்தது பற்றி விஜய் சேதுபதி சொன்னது என்ன தெரியுமா?

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு சுமூகமாக முடிந்துவிட்டது. திரையுலக பிரபலங்கள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள், இதற்கு முக்கிய காரணம் கூட்டத்தை தவிர்ப்பதே.

விஜயின் சைக்கிள் பயணம், அஜித் பிடுங்கிய செல் போன், நடந்தே வந்த விக்ரம் என சில பல பரபரப்புகளும் இன்று நடந்தேறியது. இந்நிலையில் யதார்த்த நடிகர் விஜய் சேதுபதி, கோடம்பாக்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மதியம் 2:30 மணியளவில் தனது வாக்கை செலுத்தினார். பத்திரிகையாளர்கள் அங்கு நிற்க “வாக்களித்து விட்டேன். வாழ்க ஜனநாயகம். அப்புறம் கேளுங்கள்” என சொன்னார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி என்ற கேள்விக்கு “நன்றாக உள்ளது.” என பதில் தந்தார். அடுத்ததாக ஏற்கெனவே சாதி, மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது. “அது 2019-ல் பேசியது. எப்போதுமே அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மனிதர்கள்தான் முக்கியம். மனிதன்தான் இங்கு எல்லாமே.”

vijay sethupathi

அடுத்தபடியாக சைக்களில் வந்து விஜய் வாக்களித்தது குறித்து என்ற கேள்விக்கு, ” தெல்லாம் எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள். அவரிடம் கேளுங்கள்.” என சொல்லி முடித்தாராம் மக்கள் செல்வன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top