Tamil Cinema News | சினிமா செய்திகள்
பூங்குன்றனார் பாடல் வரியை படத்தலைப்பாக ஆக்கிய விஜய் சேதுபதி.. டைட்டில் லுக் போஸ்டர் உள்ளே
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்துவிட்டார். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன், மலையாள சினிமாவில் ஜெயராமுடன் நடித்துவிட்டார். விரைவில் ஹிந்தியில் அமீர் கானுடன் தோன்ற உள்ளார்.
ஹீரோ என்பதுமட்டுமன்றி கதாபத்திரம் பிடிக்கும் பட்சத்தில் நடிக்கும் மனிதர். இவரின் 33 வது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.

VSP 33
கணியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூற்றுப் பாடலின் துவக்கத்தை படைத்தலைப்பாக வைத்துள்ளனர் படக்குழு.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
