தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தற்போது அவருக்கு வில்லனாக மாறியிருக்கிறாராம்.

வெற்றிமாறனின் கனவுப்படமான ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது. 3 பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஆண்ட்ரியா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.

சமந்தாவின் திருமண விவகாரங்களால் அவருக்குப் பதிலாக அமலாபாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் சேதுபதி ஏற்கனவே ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, கருணாஸ் என ஒவ்வொரு நடிகரையும் பார்த்துப் பார்த்து வெற்றி மாறன் தேர்வு செய்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கம், நடிகர்கள் தேர்வு, லைக்கா தயாரிப்பு ஆகியவை வட சென்னையின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.