வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஞ்சித்தை கம்முக்கமாக கலாய்த்த சேதுபதி.. உள்ளயாவது, திருந்துவாரா? இல்ல நாடகம் ஆடுவாரா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டிருக்கிறார். எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வரும்போது இவர் இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

போட்டியாளர்கள் யாரையுமே அதிகமாக பேசவிடாமல் நான்தான் தொகுப்பாளர் என்று போட்டியாளர்களை பேச வேண்டிய விஷயங்களை பேச விட்டு அவர்களுக்கு தக்க இடத்தில் அறிவுரைகளை கூறி ஒரு சிலரை கலாய்த்து விஜய் சேதுபதி அனுப்பினார்.

டக்குனு மடக்கி தட்டிய விஜய் சேதுபதி

நடிகர் ரஞ்சித் அறிமுகம் செய்யும்போது அவரிடம் நான் உங்களை சின்ன வயசில் சிந்துநதிப் பூவே திரைப்படத்தின் பார்த்த அந்த கேரக்டர் உங்களுக்கு அவ்வளவு அழகாக பொருந்தி இருக்கும். அழகான நண்பனாக நீங்கள் அந்த திரைப்படத்தில் நடித்து இருப்பீர்கள்.

அதற்கு பிறகு நீங்கள் இயக்கிய பீஷ்மர் திரைப்படமும் பார்த்தேன். அந்த படம் சூப்பரான படம். அந்து படத்திற்கு பிறகு நீங்கள் ஏன் படம் இயக்கவில்லை என்று கேட்டேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் இயக்கிய கவுண்டபாளையம் திரைப்படம் வந்த பிறகு நீங்கள் பேசியது வேறு விதமாக இருந்தது.

இதில் ரஞ்சித் என்பவர் உண்மையில் யார்? நான் பார்த்த சிந்துநதி பூவே படத்தில் கேரக்டரா? அல்லது சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும் ரஞ்சித்தின் முகம் தான் உண்மையா? இதில் எது உண்மை? என்று நச்சுன்னு கேள்வி கேட்க பதில் சொல்லமுடியாமல் தத்தளித்தார் ரஞ்சித்.

ஆனாலும் சமாளிக்க வேண்டும் அல்லவா.. ரஞ்சித் நான் சிந்து நதி பூவே திரைப்படத்திலிருந்து அதே கேரக்டர் தான் என்னுடைய நிஜ கேரக்டர். நான் இயக்கும் திரைப்படங்களில் என்னுடைய கேரக்டர் இருப்பது உண்மைதான். ஆனால் நான் எப்போதும் சரியான நியாயமான விஷயங்களை தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், இத்தனை பேர், கழுவி ஊற்றியும், நான் பேசியது கரெக்ட் என்றே சொல்லி கொண்டிருக்கிறார் பார். திருத்தவே முடியாது.. உள்ள போனதுக்கு அப்புறமாவது திருந்துகிறாரா என்று பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News