Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஜெயக்குமார்

Politics | அரசியல்

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஜெயக்குமார்

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில்,  சுபஸ்ரீ  மரணம் குறித்து பேசிய  நடிகர் விஜய் பேனர் விழுந்த விவகாரத்தில் லாரி டிரைவர் மீதும், பேனர் பிரிண்ட் செய்தவர்கள் மீது பழி போட்டதாகவும், யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படவில்லை என்றும் பேசினார்.

யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே உட்கார வைக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியைச் சாடுவதுபோல் பேசியிருந்தார்.

கோவாவில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார் இந்தக் கூட்டம் முடிந்து, இன்று காலை சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். பழுத்த மரம்தான் கல்லடி படும். அ.தி.மு.க பழுத்த மரம். படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்களைத் தாக்குகிறார் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top