fbpx
Connect with us

அன்னை இல்லத்தில் நடந்த விஜய்-செல்வராகவன் கதை விவாதம்?

vijay-selvaraghavan-movie

அன்னை இல்லத்தில் நடந்த விஜய்-செல்வராகவன் கதை விவாதம்?

தெறி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், விஜயா புரடக்ஷன்ஸ் பேனரில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய்யின் 60வது படமாக உருவாகி வரும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ள பைரவா படம், பொங்கல் வெளியீடாக வர இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜய், அடுத்தப்படியாக அட்லி இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பதாகவும், ராமநாராயணனின் மகனான ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி இப்படத்தை தயாரிக்கிறார் என்று ஒரு தகவல் அடிப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் செல்வராகவனும் விஜய்க்காக ஒரு கதையை ரெடி பண்ணியுள்ளதாகவும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவியுள்ளது.

இந்நிலையில், செல்வராகன் சமீபத்தில் பிரபுவின் அன்னை இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு விஜய்யும் வந்ததாகவும், விஜய்யிடம் செல்வராகவன் ஒரு வித்தியாசமான கதையை சொல்லியதாகவும், விஜய்க்கு அந்த கதை மிகவும் பிடித்து போய்விட்டது என்றும், ஆனால் சில மாற்றங்கள் மட்டும் விஜய் சொன்னதாகவும், அதற்கு செல்வாவும் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top