Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை கௌரவித்த ட்விட்டர்.. அந்த விஷயத்தில் 2020-ல் நம்பர் ஒன் தளபதி தானாம்!
சமூக வலைதளங்களை பொருத்தவரை வருடக் கடைசியில் குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் எந்தெந்த பிரபலங்கள் அந்த வருடத்தில் முதல் இடத்தை பிடித்தார்கள் என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் நேரடியாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க பயனுள்ளதாக இருக்கும் சமூக வலைதளம் என்றால் அது டுவிட்டர் தான்.
சினிமா படங்கள் அறிவிப்பிலிருந்து ஆங்காங்கே நடக்கும் சமூக பிரச்சனைகளை கூட உலகமே அறியும் வகையில் எளிதாக கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருப்பது டுவிட்டர். 2020 ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் ஒரு குறிப்பிட்ட சாதனையை தளபதி விஜய் செய்துள்ளதாக ட்விட்டர் நிறுவனமே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு அனைவருக்குமே பிரச்சனைதான் என்றாலும் தளபதி விஜய்க்கு இன்னும் எக்ஸ்ட்ரா பிரச்சினையாக இருந்த ஆண்டுதான் என்பது அனைவருக்குமே தெரியும். தேவையில்லாமல் விஜய் வீட்டுக்கு வருமான வரி சோதனை செய்து அவரது ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார்கள்.
அதன் விளைவு மாஸ்டர் படப்பிடிப்பிற்காக நெய்வேலி சென்றபோது ரசிகர் கூட்டம் கடலென திரண்டு வந்ததால் அவர்களுடன் தளபதி விஜய் ஒரு செல்பி எடுத்து தன்னுடைய பலத்தை அனைவருக்கும் நிரூபித்தார்.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்தப் புகைப்படத்தை விரும்பினர்.

vijay-most-retweeted-selfie-in-twitter
இதனால் 2020 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படமாக மாறியுள்ளது. இதனை ட்விட்டர் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
