“தெறி” படத்திற்குப் பிறகு தற்போது “அழகிய தமிழ் மகன்” பரதன் இயக்கத்தில் “விஜய் 60” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

இப்படத்தை தயாரிப்பது விஜயா புரடக்ஷன்ஸ். விஜய் கால்ஷீட் கொடுத்த உடன், அவரிடமும் எங்க  வீட்டுப்பிள்ளை கதையைச்சொல்லி அதில் நடிக்கக் கேட்டார்களாம். எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பார்த்த விஜய் அந்தக்கதையில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால், தன் படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என்ற தலைப்பு வைக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். அதில் ஒன்று அமைதியான கிராமத்து வாலிபன்.  மற்றொன்று சிட்டி ரௌடி வேடம்.  கிராமத்து கேரக்டருக்காக திருநெல்வேலி பாஷை பேசி நடித்து வருகிறாராம் விஜய்.