fbpx
Connect with us

Cinemapettai

ஒரு போன் போட்டு 11 பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்.. குவியும் பாராட்டுகள்

Tamil Nadu | தமிழ் நாடு

ஒரு போன் போட்டு 11 பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்.. குவியும் பாராட்டுகள்

தளபதி விஜய் சினிமா மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் பல பேருக்கு உதவிகள் செய்வதில் வல்லவராக உள்ளார். தமிழக மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே சினிமா தவிர்த்து பல ரசிகர்கள் இவருக்கு உள்ளன.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த 11 பெண்களை ஒரு போன் காலில் தளபதி விஜய் காப்பாற்றியது ரசிகர்களிடையே பெருமைப்பட வைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தேவிகா என்பவர் தூத்துக்குடியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்று உள்ளார்.

அதன்பிறகு ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சில நாட்கள் கையில் காசு இருக்கும் வரை மண்டபம், கோவில் வாசல் என தங்கி கொண்டிருந்தனர். தற்போது ஒரு பைசா கூட இல்லாமல் 20 வயதுக்கும் குறைவான 10 பேரை வைத்துக்கொண்டு வேதிகா தடுமாறி உள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் மக்கள் மன்ற உறுப்பினர்கள் உதவிகள் செய்து வரும்போது இந்த செய்தியை அவர்களிடம் கூறியுள்ளார் தேவிகா. உடனடியாக மன்ற நிர்வாகிகள் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

உடனடியாக இந்த விஷயம் தளபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர் மற்ற ஆட்களுக்கு போன் பண்ணி அவர்களை பத்திரமாக சென்னை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து தளபதி ரசிகர்கள் அவர்களை முறையான அனுமதி பெற்று பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே ஒரு போன் காலில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் தூத்துக்குடியில் தவித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை காப்பாற்றிய செய்தியறிந்து விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Continue Reading
To Top