Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் டீசர் சிறப்பு விமர்சனம்.! இதையெல்லாம் கவனித்தீர்களா.!
விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சாதனைகளையும் பெற்றது.
இந்த நிலையில் டீசரை பற்றிய சிறப்பு விமர்சனங்களை பார்க்கலாம்.
முருகதாஸ் திரைப்படத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதை அவரே கூறிவிடுவார் ஆனால் எப்படி செய்யப்போகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது, இந்தநிலையில் சர்கார் திரைப்படத்தில் விஜய் ஒரு கார்ப்பரேட் முதலாளியாக இருக்கிறார்.

sarkar teaser
டீசரில் விஜய் கெத்தாக ஒரு விமானத்தில் இருந்து இறங்கி வருகிறார் அவர் ஏன் இந்தியா வருகிறார் என்றால் தனது ஓட்டை போட வேண்டும் என்பதற்காக தான், அங்கு எதிர்பாராத விதமாக இவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு விடுகிறார்கள், விஜய் உடனே தானே ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என் ஓட்டையை யாரோ கள்ள ஓட்டுப் போட்டாங்க என கோபப்படுகிறார்.
கள்ள ஓட்டை யார் போட்டார்கள் என ஆராயும்பொழுது மிகப்பெரிய பொலிட்டிக்கல் தலைவரான ராதாரவி தான் அந்த வேலையை செய்துள்ளார் என கண்டுபிடித்து விடுகிறார், பின் vijay ராதாரவியை சந்திக்கிறார்கள் இதற்க்கு முன் டீசரில் முன்கூட்டியே வரலட்சுமி சரத்குமார் அவர் ஒரு கார்ப்ரேட் கிரிமினல் எந்த ஊருக்கு போனாலும் தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கனும் என்று நினைப்பார் அதனால் நீங்கள் கொஞ்சம் உஷாரா இருங்கள் என ராதாரவி எச்சரிப்பார் வரலக்ஷ்மி சரத்குமார்.
விஜய் ராதாரவி இருவரும் மோதிக் கொள்கிறார்கள் இதுதான் சர்கார் கதை , இதில் விஜய் ஏன் இந்தியா உடனடியாக வருகிறார் என்பதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கும் இந்த காரணம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது, மேலும் கார்பரேட் கிரிமனலாக இருந்துகொண்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் எப்படி மாறுகிறார் என்பது படத்தைப் பார்த்தால் தெரியும்.

sarkar teaser
படத்தில் அரசியல் கதைக்களம் என்றார்கள், தற்பொழுது இருக்கும் அரசியலை பேசியுள்ளார்களா, இதோ விவரம், கண்டைனர்ல பணம் வருது அந்த பணம் எப்படி வருது எங்கிருந்து வருது என சும்மா பிரிச்சி பிரிச்சி மேஞ்சி இருப்பாங்கன்னு தெரிகிறது, அதுமட்டுமில்லாமல் கலெக்டர் ஆபீஸ் முன்னாடி தீக்குளித்து இறந்தார்கள் ஒரு குடும்பம் அந்த காட்சியை படத்தில் வைத்துள்ளார்கள், மேலும்குரூப்பாக டூவீலரில் செல்கிறார்கள், இந்த சீன் எடுத்து முடித்த பிறகுதான் விஜய் தூத்துக்குடிக்கு தனியாக வந்திருப்பார் டூவீலரில் என தெரிகிறது,
மேலும் சர்க்கார் படத்தில் என்ன சுவாரஸ்யமானது என்றால் விஜய் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் அவர் இந்தியா வந்து சமாளிக்கும் பிரச்சினைகளும் போலித்தனங்களும், மக்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளையும் பார்த்து விஜய் தனது கார்ப்ரேட் ஸ்டைலில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் இதுதான் சர்க்கார், அவரை ஒரு தலைவராக இந்த படத்தில் காட்டி கொள்ளவில்லை ஆனால் கடைசியாக உங்களுக்கான தலைவரை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என ஒரு முற்று புள்ளி வைக்கிறார்.
மேலும் வரலட்சுமி சரத்குமார் எலக்ஷன் கமிஷன் அதிகாரியாக காட்டுகிறார்கள் ஆனால் அடுத்த ஒரு சீனில் அவர் பின்னாடியே ராதாரவி செல்கிறார் இதுவும் நம்ப அரசியலை நினைவுக்கு கொண்டு வருகிறது, மேலும் கீர்த்தி சுரேஷ் எலக்ஷன் பூத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணாக தான் காட்டுகிறார்கள் அவருக்கு பெரிதாக எதுவும் காட்சி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .

sarkar teaser video
ஆனால் இவருடன் விஜய் காதலில் எப்படி சிக்குகிறார் என்பதை சில சீன்களில் காட்டியுள்ளார்கள்.. இந்த டீசரில் இரண்டு சீன்கள் மட்டும் ஏற்கனவே நாம் பார்த்தது போல் இருக்கும் விஜய் ஓடும்பொழுது மணலெல்லாம் பின்னாடி தெறிக்கும் இந்த சீன் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் பார்ப்பது போல் இருக்கும், அதுமட்டுமில்லாமல் விஜய் மக்களுடன் கூட்டமாக இருப்பதை பார்த்தால் கத்தி சீன் நினைவுக்கு வரும். இந்த இரண்டு சீன்களும் செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற தீபாவளிக்கு செம்ம சரவெடி தான் ரசிகர்களுக்கு
