தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

sarkar

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதில்  தமிழ்நாடு தியேட்டர் உரிமையை மட்டும் 58 கோடிக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய் 60 முதல் நாள் தளபதியுடன் படப்பிடிப்பு - மனம் திறந்த நடிகர் ஸ்ரீராம்

விஜய் இதற்கு முன் நடித்த  மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம்தான் இந்த படத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது, பொதுவாக சன் பிக்சர் தயாரிக்கும் படத்தை அந்த நிறுவனமே வெளியிடும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் விஜய்யின் இந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுள்ளது அனைவரிடத்திலும் குழப்பத்தை  ஏற்படுத்தி உள்ளது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதற்காக இப்படி வேறொரு நிறுவனத்துக்கு விற்று வருகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.