முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இதற்கு முன் கத்தி துப்பாக்கி என்ற ஹிட் படத்தை முருகதாஸ் கொடுத்துள்ளார், சர்கார் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்  நிறுவனம் தயாரித்துள்ளது.

SARKAR

சமீபத்தில் வெளியாகிய சர்கார் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது இந்த நிலையில் சன் பிக்சர்  நிறுவனம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக தினம் தினம் புதிய ப்ரோமோ  வீடியோக்களை வெளியிட்டு கொண்டாட்டத்தில் வைத்துள்ளார்கள்.

விஜய்க்கு தமிழகத்தைப் போல் கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர் மன்றமான  கொல்லம் நண்பன் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கட் அவுட்  வைத்துள்ளார்கள் இதன்  உயரம் 175 அடி இருக்கும் என கூறப்படுகிறது.