Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.! ரசிகர்கள் ஆச்சிரியத்தில்
நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள் விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மேலும் சர்காரில் பிரபல காமெடி நடிகர் மகன் நடித்துள்ளார் ஆம் காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ரமேஷ் கண்ணா இதற்கு முன் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பார்.
அதேபோல் அவரின் மகன் விஜயுடன் சர்கார் படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது, மேலும் ஜஸ்வந்த் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் முருகதாஸ் எப்பொழுதும் தான் ஒரு காட்சியில் நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார் அதுபோலத்தான் சர்காரில் ஒரு சிறு காட்சியில் நான் நடித்ததாகவும் ஜஸ்வந்த் கூறியுள்ளார்.
