Tamil Cinema News | சினிமா செய்திகள்
50வது நாளை தொடப்போகும் சர்கார்..! முன்பதிவு தொடங்கிய பிரபல தியேட்டர்!
மீண்டும் ஒரு உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக தற்போது இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளனர். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது அந்த அளவிற்கு கேரளாவிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது அதனால் அங்கும் இப்படம் வசூலை வாரி குவீத்தது.

Sarkar
சர்கார் படத்திற்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடி கட்டி அவுட் வைத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர். இப்படம் நவம்பர் 6 தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.
ஒருவிரல் புரட்சியே வீடியோ சாங்!
சர்கார் படம் டீசர் மற்றும் பாடல்கள் இன்னும் சமூகவலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. சர்கார் சமூகவலைதளங்களில் முந்தைய படங்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்தது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி சர்க்கார் படத்தின் 50வது நாள் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக சென்னை ரோகினி தியேட்டரில் முன்பதிவு தொடங்கி விட்டார்களாம்.
