விஜய், சந்தானம் இருவரும் சேர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளனர் இப்போது இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் புதிய படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வைபவி ஷண்டிலியா என்பவர் இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதேநாளில் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.