fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெளிநாட்டில் படிக்கும் விஜய் மகன் சஞ்சயின் தற்போதைய புகைப்படம்.. நம்ம ஆளுனு துண்டா தெரியுதே

vijay-son-latest

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளிநாட்டில் படிக்கும் விஜய் மகன் சஞ்சயின் தற்போதைய புகைப்படம்.. நம்ம ஆளுனு துண்டா தெரியுதே

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பாலாபிஷேகம், பேனர்கள் என அமர்க்களப்படுத்துவார்கள்.

மேலும் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இதில் மகள் அட்லி இயக்கத்தில் வெளியாகிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தார், அதேபோல் மகனும் விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருந்தார். சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதை பற்றி நடிகர் விஜயிடம் நடன இயக்குனர் ஷோபி உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன் வளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு இருப்பதால் சஞ்சய் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது சங்கீதா விஜய்யின் தந்தை வெளிநாட்டில் தான் தொழில் செய்து வருகிறார்.

அங்குதான் சஞ்சய் படித்து வருகிறாராம், அதனால் நல்ல ஆரோக்கியமான பாதுகாப்புடன் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வெளிநாட்டில் படிக்கும் சஞ்சயின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

thalapathy-son-latest-1

thalapathy-son-latest-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top