Tamil Cinema News | சினிமா செய்திகள்
15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் மனைவியை நம்பி விஜய் வாங்கிய சொத்துக்கு ஆப்பு.. முழு காரணம் உள்ளே!
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். 80 கோடி சம்பளம் வாங்கும் விஜய்க்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
அந்த வகையில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு தனது மனைவியின் அறிவுரையில் இலங்கையில் பல கோடி மதிப்பிலான சொத்தை வாங்கி உள்ளார் விஜய்.
ஈழத்து தமிழ் பெண்ணான சங்கீதா லண்டனில் செட்டில் ஆனவர். லண்டனில் சங்கீதாவின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் என்பதும் சங்கீதா விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது சொந்த நாட்டில் விஜய்யின் மனைவி சங்கீதா பல கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.
ஆனால் சிங்களத்தை சேர்ந்து சில முதலாளிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் விஜய்யின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் விரைவில் இலங்கை சென்று நேரடியாக அந்த பிரச்சனையை தலையிட்டு முடிவு செய்துள்ளாராம்.
விஜய்யின் சொத்து என தெரிந்தும் வேண்டுமென்றே அதை வளைத்துப் போட திட்டம் போட்டு இருப்பதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vijay-sangeetha-cinemapettai
