பொங்கலுடன் முடிவுக்கு வருகிறது விஜய்யின் ”தெறி”

Vijay-Theri-Movie-Completed-Before-Pongalஅட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்ற தகவல் ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

பொங்கல் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர்களால் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘தெறி’ படத்தின் கிளைமாக்ஸ் உள்பட முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில் ஒருசில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் தற்போது சென்னையில் நடைபெறவிருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீட்டு தேதிகள் ஆகியவை ஒவ்வொன்றாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.