vijay-sa-chandrasekarஇளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையில், பல கட்சிகள் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

இதில் குறிப்பாக எல்லோரின் பார்வையும் ரஜினி, விஜய் மீதே இருக்கும், ரஜினி அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார், விஜய்யும் தற்போது சினிமாவில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று விஜய்யின் அரசியல் பார்வை குறித்து கேட்கையில் ‘எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இப்போது ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். 9- தேதிதான் சென்னை வருகிறேன், அரசியல் கேள்வி ஏதும் வேண்டாம்’ இதை மட்டும் கூறி சென்றுவிட்டாராம்.

இதனால், விஜய்யின் அரசியல் குறித்து பதில் அளிக்க அவருக்கு விருப்பமில்லை என தெரிகின்றது.