வசூல் ஆயிரத்து ஐநூறு கோடிகளைத் தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக ஓடி வருகிறது பாகுபலி 2. படம் தந்த பரபரப்புகளில் ஒன்று. அந்த ராஜமாதா சிவகாமி கேரக்டருக்கு முதலில் ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் முடியாது என்று சொன்னதால் தான் அந்த கேரக்டர் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றதாகவும் செய்தி வந்தது.

அதிகம் படித்தவை:  சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்

விஜய் நடித்த புலி ரிலீஸின்போதே அதனை பாகுபலியோடு ஒப்பிட்டனர். பாகுபலியில் நடிக்க வேண்டிய ஸ்ரீதேவி தான் புலியில் நடித்திருந்தார். இரண்டு படங்களின் கதையும் ஏறத்தாழ ஒன்று தான். சிவகாமி கேரக்டரும் யவனராணி கேரக்டரும் ஒன்று போலத்தான். இருவருமே சதிகாரர்களின் வஞ்சக வலையில் விழுந்து விடுவார்கள். இருவருமே பட்டத்து அரசிகள். இரண்டிலுமே சதியால் தந்தை கொல்லப்படுவார். மகன் அதைப் பழி வாங்க தன்னுடைய சொந்த நாட்டுக்கு செல்வார். அங்கே சென்ற பின்னர் தான் தான் அரச குடும்பத்து வாரிசு என்பது தெரிய வரும். இப்படி கதை அமைப்பில் பல ஒற்றுமைகள்.