ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

காவிரியிடம் சைடு கேப்பில் காதலை சொல்லி ரொமான்ஸ் பண்ணும் விஜய்.. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் காரில் வரும்போது சொன்ன நாணம் நளினத்தை பற்றி காவேரி யோசித்துப் பார்க்கிறார். அது ஏன் நமக்கு வரமாட்டுக்கு என்று யோசித்து விஜய் வாங்கிக் கொடுத்த சேலையை கண்ணாடி முன் நின்று வைத்து அந்த நாணத்தையும் நளினத்தையும் வர வைப்போம் என்று முயற்சி எடுத்துப் பார்க்கிறார்.

அப்படி நடந்து பார்க்கும் பொழுது எந்தவித மாற்றமும் இல்லை என்று புலம்பி நாணம் நளினம் அப்படியே வந்து விடுங்கள் என்று ரகளை பண்ணுகிறார். இதை வாசலில் இருந்து பார்த்த விஜய், காவேரிக்கு தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு விஜய், காவேரி கூப்பிட்டால் நீ வந்து விடாதே என்று சொல்லி ரூமுக்குள் போகிறார். உடனே காவிரி வெட்கப்பட்டு நிற்கிறார்.

அதன் பிறகு விஜய், அந்தச் சேலையை வைத்து எப்படி நடக்கணும் நாணம் நளினம் என்றால் என்ன என சொல்லிக் கொடுக்கிறார். ஆனாலும் காவிரிக்கு வராததால் விஜய் உனக்கு இதெல்லாம் வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடு. ஏனென்றால் எனக்கு நீ எப்போதும் போல் இருக்கும் காவிரி தான் பிடிக்கும். அதைதான் ரசித்துக் கொண்டே இருப்பேன் என்று உளறி விடுகிறார்.

உடனே காவிரி, என்ன சொன்னீங்க என்று கேட்கும் பொழுது விஜய் மழுப்பி கொண்டு நான் ஒன்னும் சொல்லவில்லை என சொல்லி விடுகிறார். பிறகு விஜய் மற்றும் காவிரி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவிரி அவருடைய அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறார். தற்போது அதே மாதிரி எனக்கு யாரும் இல்லை என்ற புலம்புகிறார். அப்பொழுது விஜய் நான் இருக்கிறேன் என்று காவிரிக்கு ஆறுதலாக பேசி பாசத்தைக் கொட்டி ரொமான்ஸ் பண்ணுகிறார்.

அதிலும் சைடு கேப்பில் பிடிச்சிருக்கு என்று சொல்லி காதலையும் வெளிப்படுத்தி விட்டார். இந்த சந்தோஷத்திலேயே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். பிறகு கங்கா, குமரனிடம் நான் கோபமாக எப்போதும் பேசுவதால் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா என்று கேட்கிறார். அதற்கு குமரன் என்னை பிடிக்காமல் தானே நீ கல்யாணம் பண்ணினாய் அதனால் உனக்கு வெறுப்பு இருக்கலாம்.

அத்துடன் காவேரி விஜய் மாதிரி நானும் கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாய். அது எனக்கு புரிகிறது கூடிய விரைவில் உனக்கு பிடிச்ச மாதிரி நான் என்னை மாற்றிக் கொள்வேன் என்று சொல்கிறார். பிறகு குமரன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது வெளியே வந்து கங்கா இவரிடம் மன்னிப்பு கேட்டு அங்கே தூங்கி விடுகிறார்.

இதை பார்த்த சந்தோஷத்தில் விஜய்க்கும் ரொமான்ஸ் வந்து காவிரியை எழுப்பி நாமும் இப்படி காற்றோட்டமாக வெளியே ஒரு கட்டில் போட்டு தூங்குமா என்று கேட்கிறார். இதை கேட்டதும் காவிரியும் வெட்டப்பட்டு ஓகே என சம்மதம் கொடுத்து இருவரும் அதே மாதிரி இருப்பது போல் கனவு காண போகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News