Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுடன் எடுத்த செல்பியை வெளியிட்ட தளபதி.. மிரளும் இணையதளம்
தளபதி விஜய்யின் ரசிகர் கூட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதற்கு சான்று தான் நேற்று நெய்வேலியில் குடும்பம் குடும்பமாக தளபதி விஜய்யை காண ரசிகர்கள் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
அளவுக்கதிகமான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இறுதியில் தளபதி விஜய் ரசிகர்களை காண வந்தார். கூட்டம் அதிகம் ஆனதையொட்டி அருகில் உள்ள வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
வழக்கத்திற்கு மாறாக குதூகலமாக இருந்த விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனால் அங்குள்ள ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்க தளபதி தளபதி என கூச்சலிட்டனர்.
எப்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை விஜய் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தளபதி விஜய் போட்ட ட்வீட் ட்விட்டரில் காட்டுத்தீ போல் பற்றிக் கொண்டது.

vijay-selfie-neyveli
