Vijay : நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. இப்போது கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய் நேற்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதிலும் அவர் வேஷ்டி மற்றும் குல்லா அணிந்து வந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து மார்ச் எட்டாம் தேதியான இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி விஜய் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் என்னுடைய அம்மா, சகோதரி தோழி என அனைவருக்கும் இன்றைய நாளில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. மகளிர் தின வாழ்த்துக்கள், ஆனால் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது எப்படி சந்தோஷத்தை உணர முடியும்.
திமுக அரசை எதிர்த்து விஜய் வெளியிட்ட வீடியோ
நாம் எல்லோரும் சேர்ந்து தானே திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றியது இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே மாற்றத்திற்கு உரியதுதான், வருகின்ற 2026 திமுக அரசை மாற்றுவோம் என விஜய் கூறியிருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் நேரடியாகவே திமுகவை எதிர்த்து இன்று வீடியோ வெளியிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் நேரடியாகவே திமுகவை விஜய் எதிர்ப்பதா தெரியவந்துள்ளது.
ஒருபுறம் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். மற்றொருபுறம் முழுமையாக அரசியலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.