Connect with us
Cinemapettai

Cinemapettai

pathaan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்ட பதான் பட ட்ரெய்லர்.. பாலிவுட் மலைபோல் நம்பி இருக்கும் படம் ஜெயிக்குமா?

ஷாருக்கான் நடித்திருக்கும் பதான் படத்தின் டிரைலரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுமார் 4 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள ஷாருக்கானின் பதான் படத்தின் ட்ரைலரை விஜய் வெளியீட்டு ட்ரெண்டாக்கி உள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே பாலிவுட் படங்களுக்கு பல காரணங்களினால் சரியான வரவேற்பு கிடைக்காமல் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் ஷாருக்கானின் பதான் படத்தை ஹிந்தி திரை உலகமே மலைபோல் நம்பி இருக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக உருவாகி இருக்கும் பதான் படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபடியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

ஆனால் இந்த படம் ஜெயிப்பது டவுட்டு தான். ஏனென்றால் டிரைலரில் எல்லாமே ஆர்ட்டிஃபிஷியல் ஆக இருக்கிறது. ஓவர் கிராபிக்ஸ் இருப்பதால் ஏதோ 3டி கேம் ஆடின பீல் இருப்பதாக பதான் பட ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

ஆகையால் இந்த படமும் தேராது. ஆனால் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜவான் படம் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இதன் மூலம் தான் பாலிவுட்டில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ட்ரி கொடுக்கிறார்.

Also Read: பாடாய்படுத்தும் ஷாருக்கான்.. எப்படா ஓடுவோம் என்று காத்திருக்கும் அட்லி

இதனால் அடுத்து பாலிவுட்டில் அட்லியின் ஜவான் படத்தைத் தவிர வேறு எந்த படமும் ஹிட் கொடுக்க முடியாது என்பது பதான் பட ட்ரெய்லரை பார்த்தால் தெரிகிறது. ஏற்கனவே பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ பாடலில் ஷாருக்கான் உடன் காவி நிற ஸ்விம்மிங் டிரஸ் அணிந்தவாறு நடனமாடும் காட்சிகள் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது.

சென்சாரிலும் இந்த விவாதம் விவாதிக்கப்பட்டு சில திருத்தங்கள் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் பதான் படத்தின் வெற்றிக்காக படத்தின் டிரைலரை விஜய் வெளியீட்டு தளபதி ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்கும் படி செய்திருக்கிறார்.

Also Read: நாங்கள் சமுதாயத்தை அழிக்கும் அரக்கர்களா.. கோபத்தில் கொந்தளித்த ஷாருக்கான்

ஷாருக்கானுக்காக விஜய் வெளியிட்ட பதான் பட ட்ரெய்லர் இதோ!

Continue Reading
To Top