fbpx
Connect with us

Cinemapettai

வாழ்நாளில் இனி விஜய்க்கு கதை சொல்ல மாட்டேன்.. அலையவிட்ட தளபதியின் மீது அதிருப்தியில் இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழ்நாளில் இனி விஜய்க்கு கதை சொல்ல மாட்டேன்.. அலையவிட்ட தளபதியின் மீது அதிருப்தியில் இயக்குனர்

தமிழ் சினிமாவில் தற்போது சினிமா வியாபாரம் என்பது தளபதி விஜய்யை சுற்றி தான் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற நடிகர்களை விட அதிக அளவு வியாபாரம் கொண்டுள்ள நடிகராக உருவெடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் இவரது ரசிகர் பட்டாளங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.

தற்போது நடிக்கும் நடிகர்கள் தளபதி விஜய்யை பற்றி எவ்வளவு புகழ்ந்து கூறினாலும் சில கசப்பான சம்பவங்களில் தளபதி விஜய் ஈடுபட்டுள்ளார் என்பது நெப்போலியன் விஷயத்தில் தெரியவந்துள்ளது.

அதேபோல் இயக்குனர் ஒருவருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய்யை வைத்து முதன்முதலாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்து கதை சொல்ல சென்றாராம் ஹரி. அந்தப் படம்தான் வேல்.

ஆனால் அவரது கதையை நிராகரித்து விட்டாராம். அதன் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என நம்பி சிங்கம் பட கதையை கூற சென்றுள்ளார். அப்போதும் முழு கதையை கேட்டுவிட்டு நிராகரித்து விட்டாராம்.

இதனால் கடுப்பான ஹரி, இனி விஜய்க்கு கதை சொல்லப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் இனி விஜய்யை வைத்து படம் இயக்கப் போவதில்லை என முடிவு செய்து தனது வட்டாரத்தில் கூறியிருக்கிறாராம்.

Continue Reading
To Top