Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியுடன் சேர்ந்து விஜய் நடிக்க இருந்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. சாமர்த்தியமாக விலகிய தளபதி
தற்போதைய தமிழ் சினிமாவில் ரஜினிக்கு நிகராக பேசப்படும் விஜய் ரஜினியுடன் சேர்ந்து சிறுவயதில் நடித்திருந்தாலும் ஸ்டார் ஆன பிறகு அவருடன் நடிக்க மறுத்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
40 ஆண்டு காலமாக நம்பர்-1 அந்தஸ்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய சினிமா வாழ்க்கையில் தோல்வி படங்கள் கொடுத்ததை விட வெற்றி படங்களின் சதவிகிதமே அதிகம்.
தற்போது அந்த உயரத்தை அடைந்து உள்ளார் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய்யின் படங்கள் தமிழ் சினிமாவில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வசூலை பெற்று வருகிறது. அதனால் சில முன்னணி சினிமா ஆர்வலர்கள் கூட ரஜினியுடன் விஜய்யை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
அப்பேர்ப்பட்ட விஜய் தனது ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
அதன் பிறகு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய் 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருந்தார்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த படத்தில் அப்பாஸ் மிகச் சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டருக்காக தான் முதலில் விஜய்யை கேட்டுள்ளார் ரவிக்குமார். ஆனால் அப்போது தனி ஒரு நாயகனாக கலக்கிக் கொண்டிருந்த விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதனால் கே எஸ் ரவிக்குமாருக்கும் விஜய்க்கும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் மின்சாரக்கண்ணா படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை என்றும் பரவலாக கருத்துக்கள் உள்ளன.
