fbpx
Connect with us

Cinemapettai

CM ஆக நடிக்க சொன்ன பிரபல இயக்குனர்.. ஆள விடுங்க என ஓட்டம் பிடித்த தளபதி விஜய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

CM ஆக நடிக்க சொன்ன பிரபல இயக்குனர்.. ஆள விடுங்க என ஓட்டம் பிடித்த தளபதி விஜய்

வியாபார ரீதியாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பது தளபதி விஜய் தான். படம் வெளியாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு 200 கோடி பிசினஸ் கிடைப்பதால் போட்டி போட்டுக்கொண்டு விஜய் படத்தை தயாரிக்க அனைத்து தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி65 படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் உலக நாயகனை வைத்து இந்தியன்2 படத்தை இயக்கிக் கொண்டிருந்த சங்கருக்கு சோதனை மேல் சோதனையாக அந்த படம் மீண்டும் உயிர் பெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதனால் அடுத்த கட்டமாக ரஜினி கமல் போன்ற மூத்த நடிகர்களை இயக்குவதை கைவிட்டுவிட்டு விஜய் அஜித் போன்றவர்களை இயக்க முடிவெடுத்து விட்டாராம் சங்கர். அதன் ஆரம்ப கட்டமாக சமீபத்தில் தளபதி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் ஷங்கர் முதன்முதலாக இணைய இருந்த படம் முதல்வன். தனக்கு அந்த கதை செட் ஆகாது என விஜய் மறுத்ததால் அர்ஜுனை வைத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். தற்போது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துவிட்டு ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறாராம் ஷங்கர்.

இந்த நேரத்தில் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை அறிந்து கொண்ட சங்கர் அவரிடம் இந்த கதையைப் பற்றி கூறியுள்ளார். மேலும் விஜய் முதல்வன்2 படத்தில் முதல் அமைச்சர் வேடத்தில் நடிக்க வேண்டுமாம். ஏற்கனவே சமீப காலமாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, மத்தியகட்சி என அனைத்து பக்கமும் பிரச்சினையை ஏற்படுத்தி வைத்துள்ளதால் அந்த கதையை நிராகரித்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை கையில் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகள் குடைச்சல் கொடுக்க நேரிடும் என்று மறுத்துவிட்டாராம். முதலமைச்சராக ஆசை இருந்தாலும் அதற்கான நேரம் வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும் என சங்கரிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டாராம்.

Continue Reading
To Top