ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 100வது படமான ‘சங்கமித்ரா’ படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வந்த தகவல் தெரிந்ததே.

இந்த படத்தில் மிகப்பெரிய ஹீரோ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என கருதிய படக்குழுவினர் இளையதளபதி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி சுந்தர் சி படத்தை விஜய் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே விஜய்யின் அடுத்த படத்தை அட்லி அல்லது ரஞ்சித் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கோடம்பாகத்தில் பேச்சு அடிபடுகிறது.