Tamil Cinema News | சினிமா செய்திகள்
முழு கதையும் சொல்றீங்களா, இல்ல டைரக்டரை மாத்தவா.. முருகதாஸுக்கு டோஸ் விட்ட விஜய்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்த பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஜூன் மாதமே தொடங்கவேண்டிய படப்பிடிப்பு திரும்ப எப்பொழுது ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளது. இருந்தாலும் தளபதி65 படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் நான்காவது முறையாக பிரபல இயக்குனர் முருகதாஸ் உடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் தளபதி விஜய். பல இளம் இயக்குனர்கள் தளபதி65 படத்திற்காக கதை கூறினர்.
ஆனால் கடைசியில் உள்ளே புகுந்து ஆட்டையை குழப்பிய முருகதாஸ் ஒன்லைன் கதை ஒன்றைச் சொல்லி தளபதி65 பட வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார். இதனால் பல இயக்குனர்கள் அவர் மீது அப்செட்டில் இருக்கின்றனர்.
முதலில் ஒரு லைன் மட்டுமே சொல்லி இருந்த நிலையில் முழு கதையையும் ரெடி பண்ணி விரைவில் சொல்கிறேன் என்று சென்ற முருகதாஸ் தற்போது வரை திரும்ப விஜய்யிடம் வரவில்லையாம்.
கதை முழுவதும் தயாரா, நான் கேட்க ரெடியாக இருக்கிறேன் என கூறியிருக்கிறார் விஜய். இதனால் விரைவில் முருகதாஸ் முழு கதையும் விஜய்க்கு சொல்லப் போகிறாராம்.
அதன் பிறகுதான் அவர் தளபதி65 படத்தை இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் யாருக்காவது வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியும்.
முன்னணி நடிகர்களுக்கு ஐஸ் வைப்பதில் முருகதாஸுக்கு நிகர் அவர் தான்!
