மிஸ்டர் இயக்கம், உனக்கு வாய்ப்பு தரேன் ஆனா ஒரு கண்டிஷன்.. அட்லீக்கு செக் வைத்த விஜய்

மாஸ்டர் பட பஞ்சாயத்துகள் ஒருவழியாக முடிந்த நிலையில் தற்போது விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான தளபதி 65 படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காத நிலையில் தற்போதே விஜய்யின் தளபதி 66, தளபதி 67 படங்களுக்கான இயக்குனர்கள் யார் என்ற செய்திகள் இணையத்தில் தளபதி 65 படத்தை விட அதிகமாக உலாவிக் கொண்டிருகின்றன.

அந்தவகையில் தளபதி 66 படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ் எனவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க தற்போது தளபதி 67 படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாம். கண்டிப்பாக விஜய்யின் தளபதி 67 இயக்கப்போவது விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீ தான் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான ஒன்லைன் கதையை ஏற்கனவே விஜய்யிடம் கூறி ஒப்புதல் வாங்கி விட்டாராம் அட்லீ. தற்போது விஜய் வாய்ப்பு கொடுத்து விட்டு மேலும் ஒரு கண்டிஷன் ஒன்றைப் போட்டுள்ளதுதான் சினிமா வட்டாரங்களில் நிம்மதியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாம்.

படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவது போன்றவை உன் படங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும், அடுத்த முறை குறித்த பட்ஜெட்டில் கரெக்டாக படம் எடுப்பதாக இருந்தால் மட்டுமே பட வாய்ப்பு தருகிறேன் என கூறியுள்ளாராம் விஜய்.

vijay-atlee-cinemapettai-02
vijay-atlee-cinemapettai-02
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்