Connect with us

Cinemapettai

vijay

Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த அவதாரம்.! இனி பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலிதான்.!

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கால்பந்து மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் படத்தில், கதிர், யோகி பாபு, ஜாக்கி ஷராஃப், விவேக் ஆரியர்கள் நடித்து வருகிறார்கள்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் படபிடிப்பு 70 நாட்கள் முடிந்துள்ளன என படக்குழு அறிவித்திருந்தார்கள், அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில்தான் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் அடுத்ததாக சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியது, ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் இன்னும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

மேலும் விஜய் தனது அடுத்த படத்தை தானே தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, இதற்கு முன் புலி திரைப்படத்தை தனது மேனேஜர் பெயரில் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

விஜயை வைத்து படம் தயாரித்து லாபம் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு இனி தலைவலி தான் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top