fbpx
Connect with us

Cinemapettai

பேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ

vijay

News | செய்திகள்

பேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ

பேட்டி கொடுப்பது என் விருப்பம்.. விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ

விஜய்யை மேலும் கடுப்பாக்கிய பி.ஆர்.ஓ

பிஆர்ஓ செல்வகுமார் சமீபகாலமாக பல பேட்டிகளில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கான தகவலை வெளியிட்டு வருகிறார். அதனை பயன்படுத்தி பலர் அவரை வெறுக்க செய்யும் செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

விஜய்க்கு 25 ஆண்டுகளாக பிஆர்ஓ செல்வகுமார் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் அந்த பதவியில் இருந்து விலகியது அனைவருக்கும் தெரியும். பிஆர்ஓ செல்வகுமார் விஜய் பற்றி ‘பேட்டி கொடுப்பது என் தனிப்பட்ட விருப்பம். விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. விஜய்க்கு நான் நெருங்கிய குடும்ப நண்பராகவும் விஜய் குடும்பத்திற்கு நம்பிக்கையான மனிதராகவும் இருந்துள்ளேன்.

அது அவர்களுக்கே தெரியும் என கூறியுள்ளார். ஆனால் விஜயும் என்னையும் பிரிப்பதற்காக பலர் தான் சொல்லாத கருத்துகளை சொன்னதுக்காக சொல்லி பிரிவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். நான் என்றும் விஜய்க்கு விஸ்வாசமாகத்தான் உள்ளேன் என கூறியுள்ளார்.

விஜய்க்கு நம்பிக்கை உள்ள மனிதராக தான் இருப்பதால் புலி படத்திற்கு தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கொடுத்தார் எனவும். தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு வியாபாரம் போன திரைப்படம் புலி எனவும் கூறியுள்ளார். இளையராஜா பற்றிய கருத்துக்களை கூறியது பற்றி கேட்கும்போது. ஒரு தயாரிப்பாளர் மற்றொரு தயாரிப்பாளருக்கு உதவி செய்வதற்காக தான் அந்த கருத்துக்களை கூறியதாக கூறினார்.

மேலும் இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு பிரச்சினை வந்தபோது அந்த பிரச்சனையை சமாளித்து அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னை பிடிக்காத நபர்கள் தான் சொல்லாத இந்த மாதிரி கருத்துக்களை கூறி விஜயிடமிருந்து என்னை பிடிப்பதற்கு முயற்சி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் விஜய்க்கு நம்பிக்கையான மனிதராக இருப்பது அவருக்கே தெரியும் எனக் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top