சிபிராஜின் ‘சத்யா’ திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி. பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில்  சிபிராஜ்,  ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கிங் மற்றும் சிறப்பு விருந்தினராக “ஷணம்” (தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதன் தொகுப்பு ” சத்யா படத்தை பற்றியும், என் நடிப்பை பற்றியும்  என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

தெலுங்கில் ஷணம் படத்தில் எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விஷேஷ் தெலுங்கில் நடித்த ஷணம் படத்தை தான்  நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார். அவரை இன்று தான் முதன் முதலில் மீட் பண்ணுகிறேன், எனினும் 10 வருடம் பழகியவர் போல் உள்ளது எங்கள் நட்பு. எனக்கு பல நாட்களாகவே தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.  இவரும்  நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகும் வகையில்  ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் அது தெலுங்கில் நல்ல என்ட்ரியாக இருக்கும். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும்.

படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது, இருந்தாலும் ஒரு டென்ஷன் இருக்கத்தான் செய்தது. அந்த சமயத்தில் தான்  விஜய் அண்ணா ‘சத்யா’ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் தொடர்பு கொண்டார். படத்தை பற்றி நல்ல ரெவியூ வருது, படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என்று சொல்கிறார்கள். வாழ்த்துக்கள் என்றார்.  மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்பொழுதும்  இளம் நடிகர்களை  ஊக்குவிக்க தவறுவதில்லை.” என்றார் சிபிராஜ்.