fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

“விஜய் 61” லேட்டஸ்ட் அப்டேட்: மந்திரவாதியாக விஜய்..?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“விஜய் 61” லேட்டஸ்ட் அப்டேட்: மந்திரவாதியாக விஜய்..?

‘விஜய் 61’ படத்தில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒன்றில், சீக்கியர் வேடத்தில் விஜய் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் விஜய் 61 படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மந்திரவாதி ஆகிய மூன்று வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மந்திரவாதி தொடர்பான காட்சிகள், முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன், குழந்தைகளை கவரும் வகையிலும் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான முறுக்கு மீசை வைத்த விஜய் கெட் அப், பஞ்சாயத்து தலைவர் வேடத்திற்கானது என தெரியவந்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்குதான் நித்யா மேனன் ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளான மே 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top