வலிமையை முந்தனும், கே ஜி எஃப் ஐ தூக்கணும்.. வழியில்லாமல் விஜய் எடுக்கும் புது ரூட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகிறது. இதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் விஜயும் பீஸ்ட் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்.

தற்போது விஜய் பீஸ்ட் படத்திற்காக ஒரு பக்கா ப்ளான் போட்டு உள்ளார்.
அஜித்தின் வலிமை படத்தைப்போல் பீஸ்ட் படத்திற்கும் அதிக தியேட்டர்கள் வேண்டும். ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கேஜிஎப் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனால் கே ஜி எஃப் 2 படமும் நிறைய திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் விஜய் பீஸ்ட் படத்தை ஏப்ரல் 14 முன்னதாகவே ரிலீஸ் செய்வதற்காக திட்டமிட்டு வருகிறார். எப்படியாவது கேஜிஎஃப் படத்தை தோற்கடிக்க வேண்டும் மற்றும் வலிமை படத்தை விட அதிக தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்து வலிமை வசூலை முறியடிக்க வேண்டும் என விஜய் பக்கா பிளான் போட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் வசூல் சாதனைபடைத்த நிலையில் தற்போது பீஸ்ட் படம் மாஸ்டர் பட வசூலை முறியடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக இருந்த கே ஜி எஃப் படத்தின் ரிலீசுக்கு முன்பே பீஸ்ட் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மிக விரைவிலே பீஸ்ட் படம் வெளியாக உள்ளது.

Next Story

- Advertisement -