
பொதுவாக நடிகர்கள் அவர்களின் சொந்த மொழியில் ஹிட்டாகி விட்டால் அந்த புகழை வைத்து பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் பல தமிழ் ஹீரோக்கள் இதர மொழிகளிலும், இதர மொழி ஹீரோக்கள் தமிழ் படங்களிலும் நடித்துள்ளனர்.
ஆனால் தமிழில் டாப் நடிகரான விஜய் இதுவரை வேற்று மொழியில் நடித்ததே கிடையாது. அவரை தவிர மற்ற ஹீரோக்கள் பிற மொழிகளில் நடித்து வந்தபோதிலும் விஜய் நடிக்கவில்லை. இவருக்கு அடுத்து சினிமாவில் கால்பதித்த நடிகர் தனுஷ் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று விட்டார்.
அவ்வளவு ஏன் நடிகர் அஜித் கூட இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் விஜய் மட்டும் தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிப்பதை தவிர்ததே வந்தார். காரணம் பிற மொழி படங்களில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் தான் பண்ண சொல்வார்கள்.
அதுமட்டுமல்லாமல் இங்கு கிடைக்கும் மரியாதை அங்கு கிடைக்காது என்ற காரணத்தால் தான் விஜய் இத்தனை ஆண்டுகள் தவிர்த்து வந்தாராம். ஆனால் தற்போது அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் தான் விஜய் தற்போது நடித்து வருகிறார்.
இவ்வளவு ஆண்டுகள் இல்லாமல் தற்போது மட்டும் விஜய் இதர மொழியில் நடிப்பதன் காரணம் என்ன என்று பலர் நினைத்தனர். அதற்கு காரணம் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என இளம் நடிகர்கள் பலரும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றனர்.
தனக்கு பின்னர் வந்த அவர்களுக்கே அங்க மார்க்கெட் இருந்தால் நமக்கும் நிச்சயம் மார்க்கெட் இருக்கும் என்பதால் தற்போது விஜய்யும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறாராம். தற்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.