தளபதி60 படத்தில் மூலம் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்
இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘விஜய் 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2017ஆம் ஆண்டு ஜனவர் 14 என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் இரவுபகலாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கேரள உரிமையின் வியாபாரம் முடிந்துவிட்டது. ரூ.6.5 கோடிக்கு இந்த படத்தின் கேரள உரிமையை IFAR என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் நடித்த ‘கபாலி’ திரைப்படம் ரூ.7.5 கோடிக்கு கேரள ரிலீஸ் உரிமை விற்பனை நடந்த நிலையில், ‘கபாலி’யை அடுத்து கேரளாவில் பெரிய தொகைக்கு விற்பனையான வெளிமாநில மொழிப்படம் என்ற பெருமையை ‘விஜய் 60’ படம் பெற்றுள்ளது.
