முருகபக்தர் இயக்கத்தில் வெளிவந்த சிலந்தி படம் படத்தின் பெயருக்கு ஏற்றார் போல சரியான பிரச்சனை வலைக்குள் சிக்கிவிட்டது. இனி, மீள்வது கஷ்டம் தான், படம் நஷ்டம் தான் என்னும் குரல்களை அக்கட தேசத்தில் ஒலிக்கின்றன.
இன்னும் ஒரு பக்கம் அந்த முன்னால் முதல்வரின் பேரனின் ரசிகர்கள் பொய் விமர்சனம் பரப்பி சிலந்தியை சிக்கவைத்து விட்டார்கள் என கூப்பாடு போட்டு வருகிறார்கள். என்னதான் சமூக வலைதளங்களில் கர்ஜித்தாலும் களத்தில் ஜெயித்தால் தானே உண்டு.
சரி விஷயத்து வருவோம், தளபதி நடிகரின் 62-வது படத்தையும் முருகபக்தர் தான் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிலந்தி படத்தில் நடித்த நாயகியையே ஒகே செய்துவிடலாம் என்று முடிவு செய்யபட்டிருந்தது. யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.
சிலந்தியின் சிக்கலுக்கு பிறகு அம்மணி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். புதிய ஹீரோயின் வேட்டை நடந்து வருகிறது. பொதுவாகவே முருகபக்தர் படத்தில் கதாநாயகிகள் டூயட் பாடுவதற்கும் ஹீரோவுடன் சிலபல கொஞ்சல்கள் செய்வதற்கும் தான் இருப்பார்கள். ஆனால், சிலந்தி படத்திலோ நிலைமை படுமோசம்.
தன்னுடன் நடிக்கும் கதாநாயகி ரசிகர்களால் ரசிக்கப்படும் நாயகிகள் பட்டியலில் இருக்கவேண்டும் என்பது தளபதி நடிகரின் பாலிசி. இதனை முருகபக்தரும் நன்கு அறிவார். இதனால், தளபதி நடிகருக்கு தெரியாமலேயே நாசுக்காக ஹீரோயினை மாற்றும் முடிவிற்கு வந்துவிட்டார் என பேசிக்கொள்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஹம்ம்..! தளபதிக்கு ஹீரோயின் ஆகும் லக் யாருக்கு எழுதி வச்சிருக்கோ..???? பொறுத்திருந்து பார்ப்போம்..!