Connect with us

Cinemapettai

விஜய்யின் அடுத்த படம் இதுதான்.. கன்பார்ம் பண்ணிய ஒளிப்பதிவாளர்

vijay-thuppakki2-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த படம் இதுதான்.. கன்பார்ம் பண்ணிய ஒளிப்பதிவாளர்

தளபதி விஜய் சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படம் வெளியாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் மாஸ்டர் படம் அடுத்த தீபாவளிக்கு தான் வெளியாகும் என தெளிவாக தெரிந்துவிட்டது.

இந்நிலையில் பல நாட்களாகவே இணையதளங்களில் மாஸ்டர் படத்திற்கு அடுத்து விஜய்யின் படம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர். கிட்டதட்ட சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு முருகதாஸ் தான் இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது.

விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபீஸில் செம ஹிட் அடித்தது. இந்நிலையில் ஒரு பேட்டியில் முருகதாஸ், துப்பாக்கி 2 படத்தை எடுக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

சமீபகாலமாக முருகதாசின் மார்க்கெட் நிலவரம் ஆட்டம் கண்டுள்ளதால் எப்படியாவது விஜய்யை வைத்து ஹிட் கொடுத்து மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறாராம். அனேகமாக துப்பாக்கி2 படத்தை இயக்கலாம் என பல செய்திகள் வெளிவந்தது.

ஒரு சில செய்திகளில் முருகதாஸ் துப்பாக்கி2 இயக்கவில்லை எனவும், இது வேற மாதிரி கதை எனவும் செய்திகள் வெளியானது. ஆனால் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சம்பந்தமே இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

thuppakki2-sandhosh-sivan

thuppakki2-sandhosh-sivan

இதனால் உற்சாகம் அடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்தது துப்பாக்கி2 தான் என முடிவு செய்துவிட்டார்கள். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளிவரும் என தகவல்கள் கிடைத்துள்ளது. இருந்தாலும் கொரானா பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் தான் விஜய் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைக்கும் என சோகத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top